ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள நீலப் படை அணியினரின் மக்களை விளிப்பூட்டும் பிரச்சார நடவடிக்கை இன்று (29) காலை கல்முனை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.எம்.ரகுமான் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சார நடவடிக்கையில் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நீலப்படையினர் கலந்து கொண்டனர்.
இவர்கள் கல்முனை மாநகர பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்குச் சென்று பொது மக்களை விளிப்பூட்டும்வகையில் துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர்.






Post A Comment:
0 comments: