குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் - JVP

Share it:
ad
குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்த போதிலும் கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் பிடிக்கப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்ய வேண்டுமென நாம் மக்களிடம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோரியிருந்தோம். ஜனநாயகத்தை நிலைநாட்ட அணி திரள்வோம் என கோரியிருந்தோம்.

ஜனாதிபதியின் குடும்ப ஆட்சி இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய விடயங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றது. கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள்.

மக்களுக்கு மற்றுமொரு வேலை பாக்கி இருக்கின்றது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தூய்மையான அரசில்வாதிகளுக்கு மட்டுமே மக்கள் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

அதனைச் செய்ததன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயற்பட மாட்டார்கள். கள்வர்கள் கள்வர்களைப் பிடிக்க மாட்டார்கள்.

ஊழல் மோசடிகாரர்கள், கள்வர்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றை மக்கள் தூய்மைப்படுத்துவார்கள் என லால்காந்த தெரிவித்துள்ளார்.

Share it:

அரசியல்

Post A Comment:

0 comments: