அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கம் தற்போது அச்சமடைந்துள்ளது. எப்போதும் அரசாங்கத்தை விட்டுக் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எ;.எம்.அஸ்வரும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக பதவி விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற செய்வோம்.
அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி ஒன்று அமுலாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments: