இந்தோனேசிய விமானம் காணாமல்போவதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் அதில் பயணித்த ஒருவர் தனது நண்பரை அழைத்து "நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்கிறேன்" என்று நகைச்சுவையாக கூறியது உண்மையாகியுள்ளது.
தனது 20 வயதுகளில் இருக்கும் நண்பர் ஒருவர் இந்தோனேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நான் தொழுகைக்குச் செல்லும் முன்னர் எனது நண்பர்களில் ஒருவர் தொலைபேசியில் அழைத்து "புத்தாண்டில் சந்திப்போம். நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார். "அவ்வளவுதன் அடுத்தது மோசமான செய்தியே எனக்கு கிடைத்தது" என்றார்.
இந்தோனேசிய விமானத்தில் பயணிக்கவிருந்த ஒருவர் வேறு திட்டத்தால்; அதனை ரத்துச் செய்துள்ளார். "உண்மையில் புத்தாண்டை சிங்கப்பூரில் கழிக்க திட்டமிட்டிருந்தேன். அவர்களுடன் நானும் போகவே இருந்தேன். ஆனால் வேறு வேலைகள் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதனை ரத்துச் செய்தேன். அந்த விமானத்தில் எனது இரு நண்பர்கள் அவர்களது ஐந்து குடும்ப உறுப்பினர்களும் இருந்தார்கள்" என்று அழுதுகொண்டே குறிப்பிட்ட அவர் "ஏதாவது அதிசயத்தின் மூலம் இறைவன் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.



Post A Comment:
0 comments: