இடி அமீனைப்போன்று ஆட்சி செய்யும் மகிந்த, 7 மாளிகைகளை கட்டிவைத்துள்ளார் - மைத்திரிபால

Share it:
ad
இன்று திங்கட்கிழமை (29) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு விஜயம் செய்த பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, , கிழக்குமாகாணசபை பிரதித் தவிசாளரான எம்.எஸ்.சுபைர் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட  பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றினார்.

நான் சுகாதார அமைச்சராக பணிபுரிந்த காலத்தில் , உங்கள் ஊர் மகன் சுபைரும் இம்மாகாண சுகாதார அமைச்சராக பணிபுரிந்ததிலிருந்து எனக்கும், அவருக்கும் நல்ல உறவு இருக்கிறது.

இடி அமீனைப்போன்று ஆட்சி செய்யும் மகிந்த, தானும் தன் குடும்பமும் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு இந்தநாட்டில் ஏழு மாளிகைகளை கட்டிவைத்துள்ளார். நான் ஜனாதிபதியானதும் இந்த மாளிகைகளை பாவையிட பொதுமக்களுக்கு சந்தர்பத்தை ஏற்படுத்துவேன்.

மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டி இருக்கின்றார்கள். இதில் முஸ்லிம், தமிழ் சிங்களம் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்று பட்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் முப்படைகளின் கட்டுமானத்தையும்,வர்த்தகப்பொருளாதாரத்தையும் தனது குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார்.

மஹிந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. எனது தலைமையில் அமையவிருக்கும் அரசில் வறுமையைப் போக்கி மக்களுக்கான அரசாகமாற்றி , நீதித்துறையை வலுப்படுத்தி சிறந்த அரசாங்க நிருவாக சேவையை மக்களுக்கு வழங்குவேன். நான் ஒரு விவசாயியின் மகன் என்பதால் ,விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காண்பேன்.

இது பொதுமக்களின் அரசு. எனது அரசு தனிக்குடும்ப அரசாக இருக்காது. நான் மஹிந்த ராஜபக்ஷ போன்று மன்னராட்சி செலுத்த மாட்டேன். அவர் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களைக் கொண்டு மாடமாளிகைகளைக் கட்டியிருக்கின்றார்.

இது சிங்கள தமிழ் முஸ்லிம்களின் நாடு, இன மத மொழி வேறுபாடுகளின்றி இந்த நாட்டை ஆள்வோம். ஆகையினால் எல்லோரும் சகவாழ்வுடனும் இன சௌஜயன்யத்துடனும் வாழலாம். எல்லோரும் தாம் விரும்பும் மதத்தை அனுசரித்துக் கொண்டு ஐக்கியமாக வாழ முடியும். துஷ்பிரயோகம் செய்கின்ற மஹிந்தவுக்கு வாக்களிக்காமல் சிறந்த முறையில் மக்களாட்சியை கொண்டுவரப்போகும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களியுங்கள்.

Share it:

Post A Comment:

0 comments: