-Tm-
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், மஹியங்கனை காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஹியங்களை நிதஹாங்கல சோரபொர எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வானில் நேற்றிரவு வந்த 15பேர் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிப்பிரயோகத்தையும் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலினால் மூவர் காயமடைந்துள்ளனர் என்று மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. காரியாலயத்தில் இருந்த அங்கவீனமான முன்னாள் இராணுவ கேர்ணல் மற்றும் இன்னும் இருவரே காயமடைந்துள்ளனர். முன்னாள் கேர்ணல், மஹியங்கனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மைத்திரியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.



Post A Comment:
0 comments: