புதிய மாணவர்களை மக்தப் பிரிவில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்

Share it:
ad
அஷ்ஷெய்க் ஹிஸ்புல்லாஹ் (ரஷாதி)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால்  நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் மக்தப் புணரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் எமது புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்மாப் பள்ளிவாயலில் இயங்கி வருகின்ற எமது பத்ரியா மக்தப் பிரிவில் EXPRESS CLASS   மற்றும் NORMEL CLASS   களுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அல்குர்ஆனைப் பார;த்து ஓதுதல்
அல்குர்ஆன் மனனம்
சுன்னத் துஅக்கள்
ஹதீஸ் மனனம்
அகீதாஇ மஸாஇல்
இஸ்லாமியப் பொது அறிவு
இஸ்லாமிய வரலாறு
அறபு மொழி
போன்ற தலைப்புக்களை உள்ளடக்கியதாக இலகுவான முறையிலும் சிறார்களை கவரும் விதத்தில் கவர்ச்சிகரமாகவும் பல துறைசார்ந்த அறிஞர் குழுவால் வடிவமைக்கப் பட்டுள்ள இப்பாடத்திட்டத்தில் நாடளாவியரீதியில் 52 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்து கல்வி பயில்கின்றனர் என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.

எனவே இம்மக்தப் பாடத்திட்டத்தில் உங்கள் அன்புக்குரிய சிறார்களை இணைப்பதன் மூலம் எதிர்காலங்களில் ஈமானிய சிந்தனை உள்ளவர்களாகவும் அர்ஷின் நிழலை அடையும் வாலிபர்களாகவும் அவர்களை உருவாக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு :  பெண்களுக்கான EXPRESS CLASS க்கு 7 வயது தொடக்கம் 12 வயது வரையுள்ள மாணவிகள் விண்ணப்பிக்க முடியும்.
                    ஆண்களுக்கான EXPRESS CLASS க்கு 7 வயது தொடக்கம் 12 வயது வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
                    NORMEL CLASS 4 வயது 6 மாதம் பு+ர;த்தியாகிய 6 வயது வரையுள்ள மாணவஇ மாணவிகள் விண்ணப்பிக்க முடியும். 

இவ்வண்ணம்,
அதிபர்,
பத்ரியா மக்தப் பிரிவு,
புதிய காத்தான்குடி.
Share it:

Post A Comment:

0 comments: