நீரில் மூழ்கி, இருவர் வபாத்

Share it:
ad
-Tm-

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடிப் பகுதியிலுள்ள  மீராகேணி நீரோடையில் நீராடிக்கொண்டிருந்தபோது, மாணவர்கள் இருவர் நீரில்  மூழ்கி உயிரிழந்ததாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று வியாழக்கிழமை மாலை  இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏறாவூர் மிச் நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கற்கும்  ஆப்தீன் ஸாஹிர் (வயது 10), மீராஷாஹிப் மிஹ்னாஸ் (வயது 10) ஆகியோரே உயிரிழந்தனர்.   இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் ஆப்தீன் ஸாஹிர் என்பவர் கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஆகக்கூடிய 186 புள்ளிகளை பெற்றவர் ஆவார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

துணி துவைக்க வருகிறது, கையடக்க கருவி (வீடியோ இணைப்பு)

இன்றைய மாறிவரும் காலகட்டத்தில் துணிகளை கைகளால் துவைக்கும் நிலை மாறி வாஷிங் மிஷின் கைகொடுக்கும் நிலை தற்போது உள்ளது. அதில

WadapulaNews