நல்லாட்சி மற்றும் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி எவ்வாறான கதைகளை கூறினாலும் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டில் நல்லாட்சியும் சட்டமும் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியிலேயே பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த எவருக்கும் முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரச இரசாயன பரிசோதகர்கள் மற்றும் இலங்கை விஞ்ஞான சேவை அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை, அபிவிருத்தி பற்றி எதனையும் பேச முடியாத எதிர்க்கட்சிகள் நல்லாட்சி மற்றும் சட்டத்தின் செயற்பாடுகள் பற்றி அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.
நாடு முழுவதும் வீதிகளை நிர்மாணிக்கும் போது கமிஷன் பணத்தை பெறுவதற்காகவே வீதிகள் நிர்மாணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும் நாட்டில் தற்போது முன்னேற்றமாக வீதி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த போது வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Post A Comment:
0 comments: