துபாயில் லட்சக்கணக்கான மலர்களோடு 'மிராக்கிள் கார்டன்' பூங்கா (அழகிய படங்கள் இணைப்பு)

Share it:
ad
துபாயில் பெரிய ஆறுகளோ, தொடர்ச்சியான மழையோ இல்லையென்றாலும் இயற்கை ஆர்வத்தோடு முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் மரம் செடிகளோடு தோட்டங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் 72,000 சதுர அடி பரப்பளவில் 45 மில்லியன் பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு சென்ற வருடம்  மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு வரப்பட்டு இப்பூங்கா அமைக்கபட்டது. 

இப்பூங்காவில் உலகின் உயர்ந்த கட்டிடம், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூக்களை காண குவிந்து வருகின்றனர். விரைவில் அங்கு ஆயிரக்கணக்கான வண்ண ,வண்ண வண்ணத்தி பூச்சிகளை கொண்ட பட்டர்பிளை பூங்காவும்  திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Share it:

Post A Comment:

0 comments: