''5 ஆயிரம் ரூபா நாணயத்தாள் கொண்ட கப்பலை கொடுத்தாலும் நான் மீண்டும் வரப் போவதில்லை''

Share it:
ad
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதியமைச்சர் எம்.கே.எஸ்.டி.எஸ் குணவர்தனவை மீண்டும் இணைத்துக் கொள்ள அரசாங்க தரப்பினர் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவர், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது அரசாங்கத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்துடன் அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? அவற்றை தீர்க்க பணம் இருக்கின்றதா?. மீண்டும் அரசாங்கத்திற்கு வருவதற்கு எவ்வளவு பணம் தேவை என தொலைபேசி அழைப்பை எடுத்த நபர் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

தொலைபேசி அழைப்பை எடுத்தவர் முன்வைத்த யோசனைக்கு நன்றி தெரிவித்த குணவர்தன, ஐயா நான் வறிய மனிதன். எனினும் நான் இந்த செயலை விரும்பவில்லை.

5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை கொண்ட ஒரு கப்பலை கொடுத்தாலும் நான் மீண்டும் வரப் போவதில்லை.

இதனால் பேச்சு இத்துடன் நிறுத்திக்கொள்வோம். ஆனால், எமது நட்பு தொடரட்டும் என குணவர்தன பதிலளித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: