சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸதான் - தேர்தல் ஆணையாளர்

Share it:
ad
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே இன்னமும் திகழ்வதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே பதவி வகிப்பதாகவே தம்மிடம் ஆவணங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் இதுவரையில் அது குறித்த உத்தியோகபூர்வ ஆவணங்கள் தேர்தல் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் பத்து நாட்ளுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியின் தலைவர் எனவும், அனுர பிரியதர்சன யாபா பொதுச் செயலாளர் எனவும் கடிதமொன்று கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக தலைமப் பதவியில் மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் வரையில், மஹிந்த ராஜபக்ஸவே கூட்டமைப்பினதும், சுதந்திரக் கட்சியினதும் தலைவராக கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவியில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் சுதந்திரக் கட்சி அதனை அறிவிக்கும் என எதிர்பர்ர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

மைத்திரியின் வெற்றி - முஸ்லிம்களின் கொண்டாட்டம் இன்னும் ஓயவில்லை (படங்கள்)

(எஸ்.எல்.எம். றாபி)இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிரிசேன அவர்களின் வெற்றி நிகழ்வினைக் கொண்டாடும்

WadapulaNews