மைத்திரிபால சிறிசேன போன்ற, அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை - பாப்பரசர்

Share it:
ad

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்ற எளிமையான மனிதரை தான் வாழ்க்கையில் சந்தித்ததில்லை என பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மீது தமக்கு புதுமையான அன்பும், கௌரவமும் ஏற்பட்டதாக புனித பாப்பரசர் தன்னிடம் கூறியதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார்.

பாப்பரசரை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட விழாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கைக்கு பயணித்ததில் தாம் பெருமகிழ்ச்சியடைந்ததாக புனித பாப்பரசர் தன்னிடம் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.

உலகில் பல நாடுகளுக்கு தான் பயணம் செய்துள்ளதாகவும், அரச தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கியஸ்தர்களைச் சந்தித்துள்ளதாகவும், எனினும், இவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை எனவும் புனித பாப்பரசர் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறினார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

இஸ்லாமும், பெர்னாட்ஷாவும்...!

உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள

WadapulaNews