மஹிந்தவின் சோதிடரின், பரபரப்பு போட்டி

Share it:
ad
முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும், அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார் என மகிந்த ராஜபக்சேவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணையாளரையும், பொலிஸ் மா அதிபரையும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பற்றப்பட்டது என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்.

நான் இல்லாவிட்டால் அவர்களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா?. தேர்தல் 2017ம் ஆண்டே நடைபெறவிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை நடத்த நானே அவரை இணங்க வைத்தேன். அப்படியில்லை என்றால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார்.

இவற்றை நாங்கள் பகிரங்கமாக கூற முடியாது.  எவரும் இதனை தமது அறிவை கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்.

நாடு பயணிப்பதை பார்த்த போது, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்தால் எமக்கு நாடு என்று ஒன்று மீதமிருக்காது என்பதை நாம் உணர்ந்தோம். அந்த எண்ணத்திலேயே நாங்கள் இதனை செய்தோம்.

ராஜபக்ச ஆட்சியில் இருந்தால் எமக்கு நல்லதாக இருந்திருக்கும், ஆனால் அது நாட்டுக்கு கெடுதியாக முடிந்திருக்கும்.

யார் என்ன கூறினாலும் எமது வயிற்றை விட நாங்கள் எமது நாட்டை நேசிக்கின்றோம். உண்மையில் கடந்த 9 ஆண்டுகள் நாட்டை நாங்களே நிர்வகித்தோம் எனவும் சுமணதாச அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

கோத்தாபய விடுத்துள்ள அறிக்கை

இலங்கை வங்கி தெப்ரோபென் கிளை கணக்கில் தனது பெயரில்  இருந்த 8 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு எடுத்துக் கொண்டதாக வெளிய

WadapulaNews