ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடையவில்லை.
சிங்கள பௌத்தர்களே தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்த தோல்வி வேதனையளிக்கின்றது. கூடிய காலம் செல்லும் முன் மக்களுக்கு இந்த உண்மை புலப்படும்.
ஏனைய இன சமூகங்கள் தங்களது இனம் பற்றி சிந்தித்து செயற்பட்ட போது, சிங்கள பௌத்தர்கள் இனம் பற்றி கரிசனை காட்டவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோற்றாலும் பௌத்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையை பொதுபல சேனா தொடர்ந்தும் ஆற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments: