-Tm-
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு, வேலை செய்ததாக கூறப்பட்டு, இந்திய உளவு ஸ்தாபனமாகிய றோவின் கொழும்பு தலைமை அதிகாரியை இலங்கை அகற்றியது என ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, புதுடெல்லியிலுள்ள பல தகவல் மூலங்கள், உற்சாகம் அளித்துடன் தேர்தல் சமயத்திலும் அவருக்கு உதவி வழங்கியதால், றோவின் முகவரை மீளப்பெறுமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன.
இந்தியாவின் பகைமையுடனான சீனாவின் பக்கம் முன்னாள் ஜனாதிபதி சாய்ந்தமையினால், இலங்கை மீது இந்தியாவின் செல்வாக்கு குறைவாகப்பேசப்பட்ட சமயத்தில், ராஜபக்ஷ எதிர்பார்க்காத விதத்தில் தோற்றப்பட்டார். மைத்திரிபால சிறிசேன உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற தூண்டியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடாது இருக்க தீர்மானிக்க வைத்து, வெல்லக்கூடியவரும் இந்தியாவுடன் ஒத்துபோகக்கூடியவருமான ஒருவரை களத்திலிறக்க உதவினார் என்றும் இலங்கையின் றோவின் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. றோ உளவு நிறுவனம் ரணிலை சந்தித்து கட்சித்தலைவர்களை தூண்டி சந்திரிக்காவையும் கொண்டுவந்தது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ராய்டருக்கு கூறினார்.
Post A Comment:
0 comments: