மலையக முஸ்லிம் கவுன்சில், மைத்திரிபாலவை ஆதரிக்க முடிவு

Share it:
ad
(இக்பால் அலி)

   நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கும் அவரின் வெற்றிக்காக களமிறங்கி உழைப்பதற்கும் மலையக முஸ்லிம் கவுன்சில் முடிவுசெய்துள்ளது. இதுவிடயமாக ஐ தே க  பாராளுமன்ற உறுப்பினர்  விஜயதாச ராஜபக்ச அவர்களின் ஒருங்கிணைப்பில் கடந்த 2014-12-26ந் திகதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள வாசஸ்தளத்தில், மைத்ரி பால சிறிசேன அவர்களுக்கும் மலையக முஸ்லிம் கவுன்சில் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி விடயம் முடிவு செய்யப்பட்டது.

         இச்சந்திப்பில் மைத்ரிபால சிறிசேன அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள,

ü மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஏற்படுத்தவிருக்கும் யாப்பு மாற்றம் 
ü தற்போதைய யாப்புமூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டிருக்கும் அளவுக்கதிகமான அதிகாரங்களுக்கு பதிலாக பாராளுமன்றத்திட்கு வகை சொல்லக் கூடியதொரு யாப்பு திருத்தம். 
ü ஏனைய பொதுமக்களை போன்று ஜனாதிபதியவர்களையும் சாதாரண பொதுமகனாக கணித்த்து சட்டத்தின் முன் சமமானவராக செயற்படுத்தல். 
ü ஒழுக்க விழுமியங்களை கொண்டதொரு சமூக முறைமையை ஏற்படுத்துதல்.
ü போதை பொருள் வியாபார நடவடிக்கைகளை கட்டுப் படுத்த விஷேட படையணியொன்றை ஏற்படுத்துதல்.போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளோர்களின் பெயர்பட்டியல்களை வெளிக்கொண்டுவருதல்,
ü புகையிலை சார்ந்த உற்பத்திகளில் எச்சரிக்கை படங்களை  80% தால் அதிகரித்தல்.
ü சமூகங்களுக்கிடையிலான சமய கலாசார உரிமைகளை உறுதிப் படுத்தி சமூக ஒற்றுமையை நிலைநிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல் .

    போன்ற விடயங்களில் கூடுதல் அவதானம் செலுத்தி இந் நாட்டில் மீண்டும் நல்லாட்சியை நிறுவுவதற்கு மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கருத்துக் கூறப்பட்டதுடன் , தற்போதைய யாப்புமுறையின் படி ஊவா மாகாண முஸ்லிம்களை போன்று பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ பிரதி நிதித்துவங்களை பெறமுடியாத சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை பெறக் கூடிய வகையில் யாப்புதிருத்தங்களை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்கப் பட்டது. 

மேற்படி விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவரால் மைத்ரி பாலசிரிசேனவுக்கு கையளிக்கப்பட்டது.  

இதன் போது கருத்துக் கூறிய மைத்ரி பாலசிரிசேன அவர்கள் மேற்குறித்த விடயங்களில் தாம் கட்டாயமாக கருத்தில் கொள்வதாகவும் தமது வெற்றிக்காக கூடுதல் கரிசனை கொண்டு உழைக்குமாறும் வேண்டிக் கொண்டார். மேலும் இது விடயமாக தமது கையொப்பத்தில் எழுத்து மூல ஆவணமொன்றை தயாரிக்குமாறு தமது செயலாளருக்கு (திரு மீகஸ்வத்த) பணிக்கப் பட்டு உரிய கடிதமும் மலையக முஸ்லிம் கவுன்சில் செயலாளர் எம் பி செய்யது முஹம்மது விடம் கையளிக்கப்பட்டது.
    
Share it:

Post A Comment:

0 comments: