கட்டுநாயக்க விமான நிலையம் முன், பிரபாகரனுக்கு சொந்தமான பெரும் பரப்பளவுள்ள காணி

Share it:
ad
தகவல் மூலம் திவயின

உயர் பாதுகாப்பு வலயமாகிய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமான பெரும் பரப்பளவுள்ள காணியொன்று இருப்பதை பாதுகாப்புத் துறையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாகவும் இத்துடன் தலைநகர் கொழும்பில் மாடிக் குடியிருப்பு, ஆடைத்தொழிற்சாலை, அச்சக நிறுவனம் மற்றும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் அச்சகம் மற்றும் அசையாச்சொத்துகளும் ஏராளமான இழுவைப் படகுகளும் உட்பட பிரபாகரனுக்குச் சொந்தமான ரூபா 200 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை  புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பிரபாகரனின் மேற்படி சொத்துகளை பகிரங்க ஏல விற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு பாதுகாப்புத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப மேற்படி பிரபாகரனின் சொத்துக்கள் பகிரங்க ஏல விற்பனையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் அரசு தரப்பில் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் பிரபாகரனின் சொத்துகள் எனக் கூறப்பட்ட மேற்படி காணி, மாடிக்குடியிருப்பு, ஆடைத்தொழிற்சாலை, அச்சகங்கள் மற்றும் சொத்துகள் பகிரங்க ஏலவிற்பனைக்கு விடப்படும் போது அந்தச் சொத்துகளை கொள்வனவு செய்வதற்காக தனிப்பட்டவர்களோ அல்லது நிறுவனங்களோ குறித்த பகிரங்க ஏலவிற்பனையில் பங்குபற்றும் சாத்தியம் மிகக் குறைவானதாகவே இருக்கலாம். 

இந்நிலையில் மேற்படி பிரபாகரனின் சொத்துகளை அரச தரப்பு மற்றும் பாதுகாப்புத் தரப்பு சம்பந்தப்பட்ட அல்லது ஆதரவுள்ள தனிப்பட்டவர்களோ அல்லது நிறுவனங்களோ கொள்னவு செய்யக் கூடிய சாத்தியமே அதிகமாகும். இதற்கேற்ப எதிர்பார்க்கப்படும் பகிரங்க ஏலவிற்பனையில் மேற்படி தரப்புகளே பங்குபற்றி போட்டியில்லாத நிலையில் குறைந்த விலைகளில் மேற்படி சொத்துகளை கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்புண்டு எனக் கருதலாம். 
Share it:

Post A Comment:

0 comments: