ஓடும் லாரியில் இருந்து, குதித்த நீர்யானை படுகாயம்

Share it:
ad
தைவானில் பண்ணைக்கு கொண்டு சென்ற போது ஓடும் லாரியில் இருந்து குதித்த நீர்யானை படுகாயம் அடைந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தைவான் தலைநகர் தைபேயில் கடந்த வெள்ளிக்கிழமை நீர்யானை ஒன்றை ஏற்றிக் கெ  £ண்டு லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென லாரியில் இருந்து நீர்யானை கீழே குதித்தது. குதித்த வேகத்தில் அதன் பற்களும் 2 கால்களும்   உடைந்து விட்டன. படுகாயம் அடைந்த நிலையில், சாலையில் கிடந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடை ந்தனர். மேலும், இந்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. 

இதைத் தொடர்ந்து, மியோலி கவுன்டி பிராந்திய போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில், தைவானின் மத்திய தைசூங் நகரில் வனவிலங்கு பூங்கா வைத்திருக்கும் ஒருவர், சீனாவில் இருந்து நீர்யானையை தனது பண்ணைக்கு லாரியில் ஏற்றி வந்திருக்கிறார்.   

அப்போது அதன் கட்டுகள் அவிழ்ந்ததால் நீர்யானை சாலையில் குதித்து காயமடைந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து, வனவிலங்கு உரிமையாளர் மீது தைவான் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ரூ.1.53 லட்சம்  அபராதம்  விதிக்கப்படும் என்று தைவான் போலீசார் தெரிவித்தனர்.
Share it:

Post A Comment:

0 comments: