சீரற்ற காலநிலை நிலவுவதால் ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை என தேர்தல் ஆணையாள மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் பல பகுதிகளில் மோசமான காலநிலை காணப்படுவதால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் எதுவுமில்லை,
அவ்வாறான வேண்டுகோள்களை தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர்களோ அல்லது அவர்களது பிரதிநிதிகளோ, முன்வைக்கவி;ல்லை.
இதேவேளை நாட்டில் நிலவும் தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு தற்காலிக அடையாள அட்டை விநியோகம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் என்பவற்றிற்கான கால எல்லையை நீடிக்குமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஜனவரி மூன்றாம் திகதி வரை தற்காலிக அடையாள அட்டையை வழங்குமாறும், வாக்காளர் அட்டையை நான்காம் திகதி வரை வழங்குமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


.jpg)
Post A Comment:
0 comments: