''மகிந்த ராஜபக்ச எதிர்கொண்டுள்ள, சவால்கள் தெளிவானவை''

Share it:
ad
-GTN + தமிழில் ரஜீபன்-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீற்றமடைந்திருக்க வேண்டும். அவரது விமர்சகர்கள் அவரை மார்கோஸ் அல்லது சுகார்ட்டோவுடன் ஒப்பிடச்செய்ய கூடிய பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் ஜனாதிபதியின் குடும்பம், அதிநவீன கார்களையும், ஹெலிக் கொப்படர்களையும், நவீன குதிரைகளையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஜனாதிபதியின் அமைச்சரவையில் சகாதரா அமைச்சாராக பணியாற்றிய மைத்திரிபால சிறிசேன , மகிந்த ராஜபக்சவின் இளையமகனின் பாவனைக்காக எப்படி பல  மில்லியன் ரூபாய் செலவில் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து குதிரையொன்று கொண்டு வரப்பட்டது என விபரித்துள்ளார்.

இதுதவிர ஆறுஹெலிக்கொப்டர்கள் ஜனாதிபதி குடும்பத்தினதும்,அவரது சகோதரர்களினதும் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்டதாகவும், நுவரேலியாவில் உள்ள தனது குதிரையில் சவாரி செய்வதற்காக ஜனாதிபதியின் இளைய மகன் அந்த ஹெலிக்கொப்டர்களில் ஒன்றை தானே செலுத்திக்கொண்டு அங்கு சென்று பின்னர் அங்கிருந்து திரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் ஏனையவர்கள் மத்தியில் பரபரப்பை தூண்டாவிட்டாலும் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் நுட்பமாக திட்டமிட்டு தன்னை இலங்கை அரசாக இணங்கானச்செய்துள்ளார்.அரச பிரச்சாரங்களில் அவரே இலங்கைஅரசு, புராதன சிங்கள மன்னனின் மறுபிறப்பு,

இலங்கையின் உயர்மத்தியதர வர்க்கத்தினரையும், இடதுசார்புகளையும் தவிர ஏனையவர்கள் இது குறித்து திருப்பதியடைந்துள்ளனர்.

இலங்கையின் தற்கால அரசியல் உளவியல், சிறிது காலம் மேலும் நீடித்தால், அரச நிதியே ஜனாதிபதியின் சொத்து, அவருடைய பிறப்புரிமை என்று கூட வாதிடக்கூடிய சூழல் உருவாகலாம்,அவருடைய கார், அவருடைய பெட்ரோல் என்பதை போல, லிபியாவின் முகமட் கடாபி அவ்வாறுதான் ஆட்சிபுரிந்தார், லிபியாவின் நிதி தனது குடும்பத்தின்சொத்து என அவர் கருதினார்.

கடாபி, சதாம், சுகார்ட்டோ போன்ற சர்வாதிகாரிகளால் தேசத்தின் சொத்துக்களை தங்கள் சொத்துக்களாக மாற்ற முடியுமானால் நான் ஏன் செய்ய முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்கலாம்.

 இலங்கையின் சமகால அரசியல் உளவியலுக்குள் இது பதிலளிப்பதற்கு சுலபமான கேள்வியல்ல, ஜனாதிபதியை சுற்றியிருந்த சிறு குழுவினரும்,அடிமை மனப்பான்மை மாறாத தேசமும் அவரை உயரத்தில் வைத்தது உண்மை.

மேலும் தன்னை பற்றிய பிரமாண்டமான சித்தரிப்பொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மிகதீவிர முயற்சிகளை மேற்கொண்டதும் உண்மை. அதேவளை இதனை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இருந்ததன் காரணமாகவே நாடு இந்த கலாச்சாரத்திற்குள் சிக்கவேண்டிய நிலை உருவானது என்பதும் சிந்திக்க வேண்டிய விடயம்.

எனினும் தற்போது ராஜபக்ச தன்னை பற்றி உருவாக்கி வைத்திருந்த சித்தரிப்புகளில் விரிசல்விழ தொடங்கியுள்ளது.இதனால் ஏற்பட்டு;ள்ள பாதிப்புகளை சரிசெய்வது அவருக்கு மிகவும் சவாலான விடயமாக அமையப்போகின்றது.

அவரது ஆளுமைகள் பற்றிய விம்பங்களை உருவாக்கிய பெருமை அவரை சூழ இருந்த அவரது தேசியவாத சகாக்களுக்கே சேரவேண்டும்.

தற்போது அவரது முன்னாள் சகாக்களே மோசடி நடைமுறைகள் நிறைந்த கேள்விப்பத்திர முறைகள் ஊடாக மக்களின் நிதி சூறையாடப்பட்டது, பாரிய அபிவிருத்தி திட்டங்களை பயன்படுத்தி பல கோடி ரூபாய்களுக்கு தரகுப்பணமும், இலஞ்சத்தையும் பெற்றனர், என குற்றம்சாட்டுகின்றனர்.


ஒரு மாதகாலத்திற்கு முன்னர் வரை ராஜபக்சவின் சுகாதரா அமைச்சராக பணியாற்றிய எதிரணிபொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சியில் இடம்பெறும் ஊழல்கள் குறித்து கேள்விஎழுப்ப வேண்டாமென ஜனாதிபதி தன்னை எச்சரித்தார் என்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை விட ஜனாதிபதியே இலங்கையின் பொருளாதராத்திற்கு அதிக தீங்கினை ஏற்படுத்தியுள்ளார் என அவரது முன்னாள் தேசியவாத சகாவான சம்பிக்க ரணவக்க சமீபத்தில் நூல்வெளியீடொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்த பட்டியலொன்றையே அவர் வெளியிட்டார்.

இவை மிக மோசமான குற்றச்சாட்டுகள்,வேறு நாடுகளில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தால் தற்போதைக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைணை ஆரம்பித்திருக்கும்.

ஜனாதிபதியின்  நிலை பாரிய  மாற்றத்தினை சந்திக்க தொடங்கியுள்ளது. தன்னை சுற்றி நடைபெறும் விடயங்கள் ,குறித்து அவர் தற்போது குழப்பமடைந்திருக்கவேண்டும்.

இவ்வாறு குழப்பமடைந்திருப்பது அவர்மாத்திரமல்ல இலங்கை வேட்பாளர்களும் தான் அரசாங்கத்தின் பிரச்சாரங்களில் மூழ்கிப்போயிருந்த கிராமப்புற மக்கள் தற்போது நடைபெறும் விடயங்களால் மிகப்பெரும் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டிருப்பர்.

என்ன நடக்கிறது?என அவர்கள் ஆச்சரியமடைந்திருக்க வேண்டும், மகாராஜா தற்போது ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அவர்கள் கேள்வி எழுப்ப கூடும், மக்கள் மத்தியில் உள்ள சிலருக்கு தற்போது நடைபெறும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்கலாம்,வேறு சிலர் அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் காணப்படலாம், அரசாங்கத்தின் தீவிரமான ஆதரவாளர்களை பொறுத்தவரை எதையோ பறிகொடுத்த மனோநிலை அவர்களை பிடித்திருக்கலாம் ஜனாதிபதியும் எங்கே தவறிழைக்கப்பட்டது என சிந்திக்க கூடும்,

கடந்த வாரம் முல்லைத்தீவில் யுத்தத்தால் அனைத்தையும் பறிகொடுத்த அந்த அப்பாவி மக்களை பார்த்து இன்னொரு அரபு வசந்தம் குறித்து எச்சரித்தார். அந்த பகுதிமக்களுக்கு தொடர்புடைய விடயமல்ல அது. எனினும் ஒரு விடயம் நிச்சயம்- தேர்தலில் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கௌரவமாக பதவிவிலகினால் இலங்கையில் அரபுவசந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் உருவாகாது.

அதேவேளை மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் அரபுஉலக சர்வாதிகாரிகள் என்ன காரணத்திற்காக பதவிவிலகாமலிருக்க தீர்மானித்தார்களோ அந்த காரணங்கள் இலங்கையிலும் காணப்படுகின்றன.

அரசபதவியில் மிகநீண்ட காலமாக நிலைத்திருந்த மத்திய கிழக்கு சர்வாதிகாரிகளுக்கு அதிகாரத்தை இழப்பது என்பது உயிர்வாழ்தலுடன் தொடர்புபட்ட விடயம், ஆளும்குடும்பம்,அவர்களது விசுவாசிகள், அரசு என அனைத்தும் மிகநீண்டகாலமாக ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பினைந்து காணப்பட்டன.

மேலும்,அதிகார துஷ்பிரயோகம், அரச நிதியை சூறையாடுதல்,மனித உரிமை துஷ்பிரயோகங்கள் என்பன அந்த அரசாங்கங்களை மீளமுடியாத நிலைக்கு தள்ளியிருந்தன.

இதிலிருந்து மீள்வதற்கு அரச துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் மாத்திரமே ஒரே வழியாக காணப்பட்டது.மேலும் இந்த அரசாங்கங்களின் தலைவர்கள் மக்களின் சீற்றத்தை குறைத்து மதிப்பிட்டனர்,இறுதியில் அதற்கு பலியாகினர்.

மகிந்த ராஜபக்ச,ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு தனது கட்சிக்குள்ளேயே காணப்பட்ட எதிர்ப்பின் அளவை பிழையாக கணித்துவிட்டார். ஜனாதிபதியின் குடும்பத்தவர்கள் மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவது குறித்து தனது அமைச்சர்கள் மத்தியில் காணப்பட்ட சீற்றத்தையும் அவர் குறைத்துமதிப்பிட்டுள்ளார். எனினும் அவர் இழைத்த மிகப்பெரும் தவறு தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் ஆணையை , ஒரு மன்னனை போன்று என்றென்றும்,சட்டத்தின் ஆட்சிஇல்லாமல், எதிர்கட்சிகள் இல்லாமல் ஆளுவதற்கு ஏற்ற விதத்தில் மாற்ற முயன்றதுதான்.

இலங்கையின் ஜனாதிபதி முறையை கடாபி, சுகார்ட்டோ, முபாரக் போன்றவர்களின் ஆட்சி போல் ஓரளவிற்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளார் ஜனாதிபதி.

மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை வெற்றிபெற்றால், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச்செல்வார் என அவரது முன்னாள் சகாக்கள் தற்போது எச்சரிக்கின்றனர். உண்மையில் அதனை நோக்கிய பாதையில் அவர் அரைவாசி பயணமசெய்துவிட்டார்.

அவர் தனது அதிகாரத்தை நீடித்து தனது வாரிசுகளுக்கு அதனை வழங்க திட்டமிட்டுள்ளார். நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கும், அரச திணைக்களங்களுக்கும், தூதரகங்களுக்கும், எனைய பலவற்றிற்கும் தனது குடும்பத்தவர்களை நியமித்துள்ளார். இவர்களில் பலர் அந்த பதவிகளுக்கு தகுதியற்றவர்களாக காணப்படடுகின்றனர். ஜனாதிபதியின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதும், விசுவாசமுமே அவர்களுக்கான ஒரே தகுதியாக காணப்படுகின்றது.

தற்போது அவரும் அவரது சகாக்களும் பாரிய சவாலை  எதிர்கொள்கின்றனர். இந்த சவால் நீண்ட்காலமாக மௌனமாக்கப்பட்ட தாராளவாதிகளிடமிருந்து மாத்திரம் உருவாகவில்லை,அவருடன் சேர்ந்து பயணித்த, ஆனால் பொருளாதாரம் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் அவரது சகாக்களிடமிருந்தும் வருகின்றது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்கொண்டுள்ள சவால்கள் தெளிவானவை. எனினும் ஜனாதிபதிக்கு இந்த நெருக்கடியான நிலைக்கான காரணங்கள் தெரிந்திருக்கும் என நான் கருதவில்லை, தனது இந்த நிலைக்கு சர்வதேச சதிகாரர்களை அவர் குற்றம்சாட்டலாம், கடாபி உட்பட பலர் இந்த தவறையே செய்தனர்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

ராஜபக்ஸ சகோதரர்களுக்கு நெருக்கடி - யுத்தத்தின் பின் மீட்கப்பட்ட உடமைகள் தொடர்பில் விசாரணை

யுத்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து மீட்கப்பட்ட உடமைகள் தொடர்பில் ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று 20-01-2

WadapulaNews