முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டோடு விடமாட்டேன். அவர் அரசியலை விட்டு இன்னும் விலகவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
தினேஷ் குனவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும், அனுர பிரியதர்ஷன யாப்பா, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச,
ஜனாதிபதி முக்கியமான விதத்தில் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறிய சந்தர்ப்பத்தில் நாட்டில் அனேகமானோர் அழுது புரண்டார்கள் நாடு பூராகவும் கண்ணீரால் நிரம்பிக் காணப்பட்டது. அவர் அரசியலுக்கு பிரியாவிடை தரவில்லை, அவரை வீட்டோடு இருப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்திருந்தார்.


.jpg)
Post A Comment:
0 comments: