மைத்ரியின் வெற்றிக்கு காரணம், சிறுபான்மையினர் மட்டும்தான் என்ற தொனியில் உள்ள ஆபத்து

Share it:
ad
மைத்ரியின் வெற்றிக்கு காரணம் சிறுபான்மையினர் மட்டும்தான் என்ற தொனியில் அநேகமானோர் சமூக வலைதளங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் உண்மை இருக்குதோ இல்லையோ ஆனால் எங்களின் இது போன்ற கருத்துக்கள் தற்போது அதிகமான பெரும்பான்மை இன மக்களிடையேயும் ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது ..!! 

அண்மையில் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் அது தொடர்பாக பேசி இருந்தார்.. அவர் கூறுகையில் "மைத்ரி இன் வெற்றியில் 88 வீதமான பங்களிப்பு சிங்கள மக்களிடம் இருந்தே கிடைக்கபெற்றது என்பதை சிறுபான்மை இன மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்" என பேசியிருந்தார்...

எது எவ்வாறாக இருந்தாலும் இது ஒரு சிங்கள பௌத்த நாடு.. 
நாம் சற்று அமைதியாக அடக்கி வாசிப்பதே எதிர்கால சமாதான நடவடிக்கைகளுக்கு நலவாக இருக்கும் என நம்புகின்றேன்.

சில கசப்பான வருடங்களின் பிற்பாடு இன்று அனைத்து இன மக்களோடும் இன ஐக்கியத்தோடு வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள இந்த அழகான தருவாயில்  பிரிவினை மற்றும் இனவாத பேச்சுக்களை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் எமது கருத்துக்களை பதிவு செய்வது சிறப்பாக இருக்கும்..!!

எனவே தற்போதைய அரசாங்கதிற்கு சிறுபான்மை மக்கள் பற்றி இருக்கக்கூடிய நல்லெண்ணத்தை பாதிக்கும் வண்ணம் அதுபோன்ற சிங்கள மக்களை தூண்டக்கூடிய பேச்சுக்களை பேசி அவர்களையும் "தெரிந்த பிசாசின்" அரசாங்கத்தை போன்று சிறுபான்மைக்கு எதிராக செயல்படும் அரசாங்கமாக மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது எம் அனைவரினதும் இன்றைய பொறுப்பாகும்..


S.A.Satham.
Share it:

Post A Comment:

0 comments: