முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மகிந்த ராஜபக்ச தேர்தல் விளம்பரங்களுக்காக 2 பில்லியன் ரூபாய்களையும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 676 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரங்களுக்காக 1 பில்லியன் ரூபாய்களையும் பத்திரிகை விளம்பரங்களுக்காக 1 பில்லியன் ரூபாய்களையும் செலவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மொத்த விளம்பர செலவான 2.03 பில்லியன் ரூபாய்களும் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஏனைய அமைச்சுக்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இதேவேளை காட்டப்பட்டுள்ள இந்த செலவுத்தொகையில் விளம்பர தயாரிப்பு செலவுகள் உள்ளடக்கப்படவில்லை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


.jpg)
Post A Comment:
0 comments: