எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எந்த கட்சிக்கும் சார்பாக அன்றி, சுயாதீனமாக செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருப்பதாக, மின்சாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து யானை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும்.
அதேபோன்று ஜே வி பியும், ஜாதிக்க ஹெல உறுமயவும் தனித்தனியே போட்டியிடவுள்ளன. சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் அதேநிலைமையே.
ஆனால் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த ஒரு தேர்தல் மேடையிலும் அந்த கட்சிக்கு சார்பாக பேசவோ, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவாக செயற்படமாட்டார் என்று அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுயாதீனமான தேர்தல் ஒன்று உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.



Post A Comment:
0 comments: