''விட்டுக்கொடுக்க முடியாது'' - மஹிந்த ராஜபக்ஷ

Share it:
ad

நாட்டினதும், பொதுமக்களினதும் எதிர்காலத்தை குறுகிய அரசியல் நோக்கத்திற்காக விட்டுக்கொடுக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.துமிந்தசில்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு கொலன்னாவை – கொட்டிகாவத்தை சந்தியில் இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, கொட்டிகாவத்தை சந்தியில் கூடிய  கொலன்னாவை பிரதேச மக்கள் பாரிய வரவேற்பு வழங்கியதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

அங்கு கூடியிருந்த மக்களிடம் ஜனாதிபதி சுகநலன்களை விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வேலைப்பளுவான நேரத்தில் தமது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காக நன்றி தெரவித்தார்.

வெற்றிகரமான பொதுகூட்டம் ஒன்றை மதிய நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவுக்கு முதலி;ல் நன்றி தெரிவிக்கிறேன்.

பொருளாதாரம் பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சியடைந்தது மட்டுமல்லாது, பிளவுபட்டிருந்த நாட்டை நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்தி கட்டியெழுப்பியுள்ளோம்.

தனிநபர் வருமானத்தை அதிகரித்தோம். அந்நிய செலாவணியை மேம்படுத்தினோம்.  கிராமத்தின் செழிப்பு இன்று கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பின் அபிவிருத்தி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்களின் சமூக வாழ்வாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: