மாலைதீவுக்கு இலங்கையிலிருந்து தண்ணீர்

Share it:
ad

மாலைதீவின் தலைநகர் மலேயில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நீர் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேயில் நீரை விநியோகிக்கும் பிரதான நிறுவனத்தின் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீரின்றி அவதிப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அயல் நாடுகளிடமிருந்தும் உடனடியாக நீரை பெற்றுக்கொள்ள உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு லட்சம் குடிநீர் போத்தல்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்சமயம் குடிநீர் போத்தல்கள் வானுர்தி மூலம் அனுப்பபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்திய அரசாங்கமும் ஐந்து வானுர்திகள் மூலம் 200 தொன் நீரை அனுப்பி வைத்துள்ளது. மேலும் இரண்டு கப்பல்களில் நீரை அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தீப்பரவல் காரணமாக அந்த நாட்டின் நீர் விநியோக நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாக கைவிடப்பட்டிருந்தது.

இதன்காரணமாக, மாலைதீவின் நாளாந்த நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share it:

Post A Comment:

0 comments: