'மைத்திரிபால சிறிசேன அழுது புலம்பினார்' - மஹிந்த ராஜபக்ஷ

Share it:
ad
சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படங்களைப் பிரசுரிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எவரும் தலையிடமுடியாது. மைத்திரிபால சிறிசேன அமைச்சராக நீதிமன்றம் சென்றார் என்பதற்காக நீதிமன்றம் பயந்து செயற்படாது. நீதிமன்றம் அதன் பணியை சரியாகச் செய்திருக்கிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அழுது புலம்பினார் என ஊடகவியலாளர்கள் நேற்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இதனைக் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது சிகரட் பெட்டியில் எச்சரிக்கைப் படங்களைப் பிரசுரிக்க வேண்டுமென்ற கொள்கையை ஆரம்பித்தவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தான்.

இன்னொருவருடைய பிள்ளைக்கு மைத்திரிபால பிறப்புச் சான்றிதழ் தேடுகிறார். ஒழுங்குவிதிகள் வேறு, சட்டம் வேறு. ஒழுங்குவிதிகள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படுவது சட்டமாக்குவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் 3 வாரங்கள் பிரசுரமாக வேண்டும். ஒழுங்கு விதிகளை நீதிமன்றில் எதிர்க்கும் உரிமை நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இருக்கிறது.

சிகரட் பெட்டி விவகாரம் நீதிமன்றம் சென்ற போது மைத்திரிபால நீதிமன்றில் சில விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

அப்படி இருந்தும் என்மீதும் அரசாங்கத்தின் மீதும் குற்றம் சாட்டுவது மிகவும் தவறானதாகும். இவர் போய் நீதிமன்ற வழங்கில் இருந்தார் என்பதற்காக நீதிமன்றம் பயப்படாது. அவர் இணக்கம் தெரிவித்ததன் படிதான் நீதிமன்றம் நடந்துள்ளது. சிகரட் பாவனையை (புகைத்தலை) குறைப்பதற்காக நாம் கடைப்பிடிக்கும் ஒழுங்கு விதிகள் வெற்றியடைந்திருக்கின்றன. பொது இடங்கள் பஸ்களில் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிகரட் விலைகளை ஒவ்வொரு பட்ஜட்டிலும் அதிகரித்துக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் வெள்ளை பீடி பாவனை அதிகரித்துள்ளது.

புகைத்தல் பாவனையைக் குறைக்க ஊடகங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்கான விரிவான வேலைத்திட்டம் அவசியப்படுகிறது என ஜனாதிபதி விபரித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: