ஒரு குடும்பம் கூட்டிணைந்து இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு நகர்த்தியுள்ளது - பாலித தெவரப்பெரும

Share it:
ad
தனியொரு குடும்பம் நாட்டை அழித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சலூன் கதவில் தற்போது பயனில்லை.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பதனை ஒப்புக்கொள்கின்றோம். எனினும் நாட்டின் சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை, ஒழுக்க விழுமியங்கள் சீரழிந்துள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் முனைப்பு காட்டத்தவறியுள்ளது.

ஒரு குடும்பம் கூட்டிணைந்து இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு நகர்த்தியுள்ளது.

இதனை தடுக்கும் நோக்கிலேயே சகல சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன என பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டுவாரா அல்லது ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை சாதிக்குமா என ஊடகமொன்று பாலித தெவரப்பெருமவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலித தெவரப்பெரும வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார் என பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும், தாம் கட்சியை விட்டு விலகிப் போகப்போவதில்லை என தெவரப்பெரும குறிப்பிட்டிருந்தார்.

Share it:

Post A Comment:

0 comments: