''முஸ்லிம்களின் வாக்குகளை சுவீகரிக்க சதி'' பிரதான நடிகன் ஞானசார - ஆசாத்சாலி

Share it:
ad
இரண்டு வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

அதன்படி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.அதற்கு மைத்திரிபாலவுடன் இணைந்து கொண்டுள்ள நபர்களின் கடந்த கால மற்றும் தற்கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கசெயற்பட்டுள்ளார். எனவே மைத்திரிபால சிறிசேனவை நம்ப முடியாது என பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொதுவேட்பாளர் மைத்திரபால சிறிசேனாவிற்கு மட்டுமல்லஇ அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா  தெரிவித்துள்ளது.

மேற்சொன்ன இந்த அறிவிப்புக்கு காரணம் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிப்பதை தடுத்துநிறுத்துவதற்குத்தான் என ஆஸசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

தாம் 2 பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவில்லை, என்பதன் மூலம் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தாம் ஆதரவு இல்லை என பொதுபல சேனா காண்பிக்க முயலுகிறது. இதனால் மஹிந்த ராஜபக்ஸவுடன் பொதுபல சேனா இல்லையென முஸ்லிம்கள்  நினைத்து, மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்கலாம். இந்த சூழ்ச்சியில் சில முஸ்லிம் கட்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆசாத்சாலி சுட்டிக்காட்டினார்.


Share it:

Post A Comment:

0 comments: