'தமிழ் முஸ்லிம் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படினும், 18 இலட்சம் வாக்குகளால் மஹிந்த வெற்றிபெறுவார்'

Share it:
ad

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம். ஆனால் அதற்கு ஐ.தே. கட்சி தலைமமைத்துவம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசுக்குள்ளிருந்து கொண்டு இதனை ஒழிப்பதற்கு சாகும் வரை உண்ணாவிரதமிருக்கவும் தயாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் நிறைவேற்று அதிகாரத்திற்கும் தற்போதைய தேர்தல் முறைமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து 1978இல் கறுப்பு கொடி ஏந்திப் போராடினோம். 

அன்று எமது கையில் ஏந்திய கறுப்புக் கொடியை இன்றும் நாம் கீழே வைக்கவில்லை. 

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையையும் தற்போதைய தேர்தல் முறைமையையும் இன்றும் எதிர்க்கின்றோம். அதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். 

ஆனால் அதற்கு முன்னிற்பது ஐ.தே கட்சி அவர்களது மேற்குலக அரசியல் கொள்கைகளுடன் எமக்கு உடன்பாடு கிடையாது. 

எமது கொள்கையும் அரசியல் கொள்கையும் வேறு. அந்த கொள்கை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடமே உள்ளது. 

எனவே இதனை விட்டு வெளியேற விட்டோம். அரசுக்குள்ளேயே இருந்து கொண்டு நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக போராடுவோம். நிச்சயம் இத் தேர்தலுக்கு பின்னர் இது நடக்கும். 

காலம் தாழ்த்தப்பட்டால் அதற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருக்கவும் நான் தயங்க மாட்டேன். 

இத் தேர்தலில் தமிழ் முஸ்லிம் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் 18 இலட்சம் வாக்குகளால் மஹிந்த வெற்றி பெறுவது உறுதியாகும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 
Share it:

Post A Comment:

0 comments: