கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மைத்திரியும், ரணிலும் ஆற்றிய உரைகள் (வீடியோ)

Share it:
ad

சமையல் எரிவாயுவின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்டமை தொடர்பில் கண்டியில் இன்று 09-12-2014  இடம் பெற்ற பொது வேட்பாளருக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்துரைத்துள்ளார்.

எரிவாயு விலை அண்மையில் 250 ரூபாவால் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இதுவரை காலமும் எரிவாயுவின் விலை குறைக்கப்படாமல் இருந்த போது மொத்தமாக 10 மில்லியன் ரூபாய்கள் லாபமாக உழைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிதி கல்விக்கு அல்லது சுகாதாரத்திற்கு அல்லது விவசாயிகளுக்கு செலவளிக்கப்படாவிட்டால் அல்லது வேதன உயர்வு வழங்கப்படாதிருந்தால் அந்த பணம் யாருடைய கைகளுக்கு சென்றிருக்கும் என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அபிவிருத்தி பற்றி பேசுகிறது.

எனினும், புனித மிக்க கண்டி நகரை அது மறந்து விட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கண்டியில் இன்று இடம் பெற்ற முதலாவது பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நான்கு ஒழுங்கைகளை கொண்ட வீதிகள் அமைக்கப்படும் போது, தலதா மாளிகை அமைந்திருக்கும் புனித நகரான கண்டியில் எவ்விதமான அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை என் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
Share it:

Post A Comment:

0 comments: