''இலங்கை அடுத்த சில மாதங்களில், மோசமான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்''

Share it:
ad
இலங்கை அடுத்த சில மாதங்களில் மிக மோசமான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்,என பிரசல்ஸை தளமாககொண்ட சர்வதே நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல், நெருக்கடிகளும், வாய்ப்புகளும் என்ற தனது புதிய அறிக்கையிலேயே நெருக்கடி குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

 இலங்கையில் ஜனநாயகசூழலை ஏற்படுத்துவதற்கான எதிர்கட்சிகளின் முயற்சி வன்முறையையும் ஸ்திரதன்மையையும் உருவாக்கும்.


குழப்பகரமான சூழலை உருவாக்காமல் இதனை கடந்து செல்வதற்கு அரசாங்கமும், எதிர்கட்சிகளும்,அரசியல் திறமையுடன் நடந்துகொள்வது அவசியம்.

சர்வதேசமூகம் இலங்கை குறித்து தீவிர கவனத்தை செலுத்தினால்,இரு தரப்பிற்கும் தெளிவான செய்தியை தெரிவித்தால்  இது சாத்தியமாகும்.

நீதியான மற்றும் சுதந்தரமான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்வதற்கும், தேர்தலிற்கு பின்னர் ஸ்திரத்தன்மை நிலவுதை உறுதிசெய்யவும்,உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீவிர தேர்தல்கண்காணிப்பை மேற்கொள்வதை இலங்கையின் சகாக்கள் வலியுறுத்தவேண்டும், ஆதரிக்கவேண்டும்.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு அவர்கள் அதன் சர்வதேச கடப்பாட்டை நினைவுபடுத்துவதுடன் அதனை நிறைவேற்ற தவறினால் இராஜந்திர விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும்.

பலத்தை பயன்படுத்தியோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ ஆட்சியை கைப்பற்றுவதற்கு நடைபெறும் முயற்சிகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துவதுடன் எதிர்கால ஸ்திரமின்மைக்கு வித்திடும், என இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: