நுவரெலியா மாவட்டத்தை வென்று காட்டுமாறு ஆறுமுகன் தொண்டமான் சவால்

Share it:
ad
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறு எனவும் தான் மைத்திரிக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு அளிப்பதாகவும் கொட்டக்கலையில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். 

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

ஆனால் தோட்ட மக்களுக்கு இந்த அரசாங்கம் பல அபிவிருத்தி வேலைகளை செய்துள்ளதாகவும் தோட்டங்களில் ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளதுடன் தோட்ட மக்களின் வீடு, காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்கட்சியில் உள்ள சிலர் நுவரெலியா மாவட்டத்தை முடிந்தால் வென்று காட்டுமாறு சவால் விடுவதாகவும் ஆனால் 9ம் திகதி முடிவை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: