ஜனாதிபதி பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தம்மால் வீதியில் நடந்து செல்ல முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புளத்சிங்களயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
நாட்டில் இனத்துவேசத்தை, மத துவேசத்தை இல்லாதொழிக்க வேண்டும்.
ஒருவர் தம்மை பற்றி கூறும் போது லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலையே தமக்கு ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார்.
சிலர் வீரர்களாக தம்மை காட்டிகொள்வதற்காக இவ்வாறான கருத்துக்களை கூறுகின்றார்கள்.
தம்மை பொறுத்த வரையில் ஜனாதிபதி பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீதியில் நடந்து செல்ல முடியும்.
இலங்கை பொது மக்கள் தம்மை பாதுகாப்பர்.
எனினும், ஏனையவர்களுக்கு அவ்வாறு வீதியில் நடந்து செல்ல முடியும் என நினைத்தும் பார்க்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.


.jpg)
Post A Comment:
0 comments: