அக்கரைப்பற்று மாநகர சபையின் 2015ஆண்டின் வரவு செலவுத்திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்
அக்கரைப்பற்று மாநகர சபையின் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி அவர்களினால் 2014.12.24ஆம் திகதி இன்று புதன்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மாநகரின் அபிவிருத்தி, மக்களின் நலன் என்பனவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வரவு செலவுத்திட்டம் உறுப்பினர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றதுடன் ஏகமனதாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
தேசிய காங்கிரஸின் ஆளுகையின் கீழ் உள்ள இம்மாநகர சபையின் 05ஆவது வரவு செலவுத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments: