அபிவிருத்தி செயற்றிட்டங்களின் ஊடாக நாட்டிற்கு புதிய பெறுமதியை பெற்றுக்கொடுக்கவுள்ளேன் - மஹிந்த

Share it:
ad
அபிவிருத்தி செயற்றிட்டங்களின் ஊடாக நாட்டிற்கு புதிய பெறுமதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

அபிவிருத்திகள் தொடர்பாக யார் எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் தமது அரசாங்கம் தொடந்தும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச கணக்காய்வாளர்களுடன் இன்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

உணவுக்காக மாத்திரம் தமது அரசாங்கம் சர்வதேச கடன்களை பெறவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திகளுக்காகவே அவற்றை ஈடுபடுத்தியதாக குறிப்பிட்டார்.

நாட்டில் அபிவிருத்தி என்ற அடிப்படையில், துறைமுகமோ அல்லது வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அது ஒரு சொத்தாக அமைகின்றது.

இந்த அனைத்து விடயங்களாலும் தாம் நாட்டிற்கு புதிய பெறுமதி சேர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: