எனது அரசியல் வாழ்வின்போது...!

Share it:
ad
(Gtn)

ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடக இயக்கத்தின் முக்கியஸ்த்தர்களை  சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார்.

ஊடக சுதந்திரம், தடை நீக்கம், மற்றும் சமூக பொறுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய கோவை ஒன்றை சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர இன்று (16) ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

இதன்போது, மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாவது;

எனது அரசியல் வாழ்வின்போது எந்தவொரு ஊடக நிறுவனத்துடனோ அல்லது எந்தவொரு ஊடகவியாலாளருடனும் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஊடகங்களை ஒடுக்கும் வகையில் எமது அரசாங்கம் செயற்பட்டபோதும், வேறு  அரசாங்கங்கள்  செயற்பட்டபோதும் நான் அதற்கு எதிராக செயற்பட்டேன்.  இந்த நாட்டில் இதற்கு முன்னர் அரச தலைவர்கள் செயற்பட்டதைவிட, தெளிவான முறையில் நான் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவேன், என்றார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மைத்ரிபால சிறிசேன

“ஊடகவியலாளர்களை கொலை செய்த மற்றும் அவர்களை துன்புறுத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற தேவை எனக்கும் உள்ளது. அச்சுறுத்தல்கள் காரணமாக சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர்.  எனவே, அதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்

இலங்கையின் ஊடகச் சுதந்திரம்

சுதந்திர ஊடக இயக்கம்  பொது எதிர்க்கட்சிக்கு சமர்ப்பிக்கும் குறுகியகால  யோசனைகள்:-

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து அரசியலமைப்பிற்கான 17 ஆவது திருத்தத்தை மீண்டும் வலுவாக்கம்  செய்வதற்கும், மிகப் பொருத்தமான தேர்தல் முறையை ஸ்தாபிப்பதற்கும், மக்களை ஒடுக்கும் பொருளாதார க~;டங்களுக்கு நிவாரணங்கள் வழங்கவும், முதல் நூறு நாட்களில் அமுலாக இருக்கம் நிகழ்ச்சித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டும், ஜனாதிபதி  தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிடும் திரு. மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு சுதந்திர ஊடக இயக்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும்.  சுதந்திர ஊடக இயக்கம் ஜனாதிபதி வேட்பாளர் திரு. மைத்திரிபால சிறிசேனவுடன் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உத்தியோகபூர்வ பங்காளனாக  செயற்படுகிறது.  

கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களிடம் இருந்து தகவல் அறியும் உரிமையைப் பறிக்க வேண்டாமெனவும், ஊடகச் சுதந்திரத்தைப்  பேணிப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தலைமைத்துவம் வழங்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு சுதந்திர ஊடக இயக்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது.  ஆனால், மேற்படி கோரிக்கையை ஜனாதிபதியை முதன்மையாகக்  கொண்ட அரசாங்கம் முற்றிலும் பொருட்படுத்தாமல் கைவிட்டுவிட்டது.  எனவே மூன்றாவது பதவிக் காலத்திற்குப்; போட்டியிடும் திரு. மஹிந்த ராஜபக்~விற்கு அத்தகைய கோரிக்கையை விடுத்து எதுவித பலனுமில்லையென சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.

ஆகவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் திரு. மைத்திரிபால சிறிசேன அவர்களின் அரசாங்கம் முதல் நூறு நாட்களில் இலங்கையின் ஊடகச் சுதந்திரத்தை ஓரளவேனும் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் வழங்கும் என பின்வரும் யோசனைகளை முன்வைக்கிறோம்.

1.    தகவல் அறியும் சுதந்திரம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சமவாயமும் இலங்கை அரசியலமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ள, பொதுமக்களின் கைமாற்ற முடியாத உரிமையான தகவல்களை அறியும் சுதந்திரத்தை மதிப்பதாக 2004 பெப்ருவரி மாதத்தில் அன்றைய பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் அமைச்சரவை அங்கீகரித்த தகவல் சுதந்திரத்திற்கான சட்டத்தை வலுவாக்கம் பெறச் செய்ய வேண்டும்.  அதேசமயம் ஊடக அமைப்புக்களுடனும், ஊடக பதிப்பாசிரியர்களுடனும், ஊடக உரிமையாளர்களைப் பிரகடனப்படுத்தும் இலங்கையின் ஊடக நிறுவனங்களோடு ஒத்துழைத்து செயற்படுமாறு சுதந்திர ஊடக இயக்கம் வேண்டிக்கொள்ளுகிறது.


2. தண்டனையில் இருந்து விலக்களிக்கும் சிறப்புரிமையை இல்லாதொழித்தல்


அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை வலுவலக்கம் பெறச் செய்ததன் பின்னர், சுயாதீன நிறுவனமாக ஸ்தாபிக்க வேண்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகளையும், அவர்களுக்கு ஏற்பட்ட தாக்குதல்களையும், ஊடக நிறுவனங்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதல்களையும் உரிய முறையில் விசாரணை செய்ய ஆரம்பித்து அதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கருமபீடம் ஒன்றை ஆரம்பித்தல் வேண்டும்.  அரச பாதுகாப்புத்துறை மற்றும் புலனாய்வுத்துறை என்பன இதுவரை கண்டறிந்துள்ள தகவல்களைப் பெறுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

3.    ஊடகச் சுயாதீனம்

ஊடக நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட உண்மையை மதிக்கும் சமநிலையான பன்மைத்துவ ஊடக கலாசாரத்தை அமுல்படுத்துவதன்மூலமே, பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை நிலைநிறுத்த முடியும்.  இதற்கான அடையாளச் சின்னமாகவும் ஆரம்ப நடவடிக்கையாகவும் அரச ஆட்சியின்கீழ் அமைந்துள்ள அடக்குமுறை இலத்திரனியல் ஊடகங்கள் அரசியல் மயப்படுத்தலில் இருந்து விடுவித்து பொதுமக்கள் ஊடக சேவையை அனுசரிக்கும் வகையில் அவற்றை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களின் பின்னர் இடம்பெறும் பொதுத் தேர்தலின்போது அரச நிர்வாகத்தின்கீழ் செயற்படும் ஊடகங்கள், தேர்தல் ஆணையாளரின் பரிந்துரைகளை அச்சொட்டாக அமுல்படுத்துவதை உறுதிசெய்தல் வேண்டும்.

4.    ஊடகத் தணிக்கையை இல்லா தொழித்தல்

கடந்தகாலம் முழுவதும் இலங்கையின் ஊடகங்கள் பயங்கரமான முறையில் சுயதணிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டமை பகிரங்க உண்மையாகும்.  உண்மையைக் கண்டறிதலும், உண்மையை அறிக்கையிடுதலும், மரண அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாக அமைகின்றன.  இந்நிலைமையை மாற்றியமைத்து, அடையாளச் சின்னமாகவும், உடனடி நடவடிக்கையாகவும் தற்போதைய அரசு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகாப்பற்றற்ற வகையில் அமுலாக்க தணிக்கையில் இருந்து சகல இணையதளங்களையும் விடுவிக்க வேண்டும். 

5.    சமூக வகைப்பொறுப்பு

ஊடகச் சுதந்திரம், சமூக வகைப்பொறுப்புடன் செயற்படுவதற்கு கடப்பாடு கொண்டுள்ளதென சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.  சமூக வகைப்பொறுப்பு, ஊடக நெறிமுறைகள்மூலம் பகிரங்கப்படுத்தப்படுகிறது.  பொய்யான  செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தனிநபர்களுக்கு சேறுபூசும் ஊடகச் சுதந்திரத்தை, உள்ளிருந்து சீரழிக்கும் புற்றுநோயாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.  ஆகவே ஒருமுனைவாத இத்தகைய தனிநபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கு ஊடகப் பதிப்பாசிரியர் ஒன்றியத்தின் தலைமையின்கீழ் சுதந்திர ஊடக இயக்கத்தினதும் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இலங்கை ஊடக நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ள  தொழில்சார் நெறிமுறைக் கோவையை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழுவினதும் துணைதொண்டு அடிப்படையில் இணையுச்; சுதந்திரத்தை பேணுமாறு சுதந்திர ஊடக இயக்கம் மேற்படி இணையதளங்களைக் கோருகிறது.  

புதிய ஜனாதிபதியின்கீழ் நூறு நாள் மறுசீரமைப்புக்கள் முடிவடைந்ததும் உத்தேச தேசிய அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் கருதும் நீண்டகால யோசனைகளை ஏனைய ஊடக அமைப்புக்களுடன் கலந்துரையாடி சமர்ப்பிக்க உத்தேசிக்கின்றோம்.

இங்ஙனம்,
சுனில் ஜயசேகர
அழைப்பாளர்
சுதந்திர  ஊடக இயக்கத்தின் சார்பில்.
Share it:

Post A Comment:

0 comments: