நான் ஒரு பௌத்தனாக இருந்தும், 'முனாபிக்' என்றால் என்னவென்று எனக்குத் தெரியும் - ரணில் விக்ரமசிங்க

Share it:
ad
-அனா-

நாங்கள் வெற்றி பெற்று ஐந்து வருடத்திற்குள்; நாட்டில் சிறந்த தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் ரனில் விக்ரம சிங்க தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபல ஸ்ரீசேனவை ஆதரித்து ஓட்டமாவடியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

நாட்டில் கப்பல் வராத துறைமுகங்களை அமைக்க மாட்டோம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன் திருகொணமலை தொடக்கம் அம்பாரை வரை கிழக்கு மாகாணத்தில் பல்வேறு கைத்தொழிற்சாலைகளை உறுவாக்கி அதன் மூலம் சிறந்த தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வோம்.

இன்று நாட்டில் மூன்று நேரம் நிம்மதியாக சாப்பிட முடியாமல் மக்கள் பொருளாதாரத்தினால் கஸ்டப்படுகின்றனர் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக அத்தியாவசியப் பொருட்கள் பத்தினது விலைகளை உடன் குறைப்பதுடன எண்ணைய்களின் விலைகளையும் குறைத்து நெல்லின் உத்தரவு விலையினை ஐம்பது ரூபாவினால் அதிகரிப்போம் அதே போன்று வெளிநாட்டு மீனவப் படகுகளை நாட்டுக்குள் சட்ட விரோதமாக வந்து மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதை தடை செய்வோம் நாட்டில் உள்ள மக்களது பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வோம்.

தற்போது இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு என்ன நடக்கின்றது என்று பாருங்கள் இலங்கையில் புலிப் பயங்கரவாதிகள் இருந்த போது பள்ளிவாயலில் சுட்டனர் இவர்களது ஆட்சியில் பள்ளிக்குப் போவதே கஸ்டமான நிலையாக மாறியுள்ளதுடன் பள்ளிவாயல்களை பராமரிப்பதும் அங்கு சென்று மார்க்கக் கடமைகளைச் செய்வதும் கஸ்டம் நாட்டில் மதங்களுக்கிடையில் பிரச்சினைகளை உண்டு பண்ணியது இந்த அரசாங்கம்தான் இவர்கள் நினைத்துக் கொண்டார்கள் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தூண்டி விடுவதால் தேர்தல்களில் இலகுவில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் இனங்களை தூண்டி அரசியல் செய்வது ஒரு போதும் சாத்தியமாகாது என்று ஜனவரி 08ம் திகதி மக்கள் இவர்களுக்கு நிரூபிப்பார்கள் மக்கள் தற்போது அரசியலில் மிகத் தெளிவுடன் உள்ளனர்.

இன்று அமீர் அலி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துக் கொண்டு துரொகம் செய்து விட்டார் என்று கூறுகின்றனர் அது தவரான கருத்தாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்காவை அந்தப் பக்கம் கொடுத்து விட்டு அந்தப் பக்கம் இருந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியை எங்களது பக்கம் எடுத்துள்ளோம் இதனால் பண்டமாற்று வியாபாரத்தில் நடந்த மாற்றம் ஒன்றுக் கொன்று சமமாகின்றது.

என்னிடம் இருந்து அவர் ஒன்றை எடுத்தார் நான் அவரிடம் இருந்து ஒன்றை எடுத்துள்ளேன் விடயம் சரிதானே திஸ்ஸ அத்தனாயக்காவை எடுக்காமல் இருந்திருந்தால் நான் அமீர் அலியிடம் கூறியிருப்பேன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுக்காமல் மாகாண சபை உறுப்பினராக எங்கள் பக்கம் வரும்படி இவ்வாறான கட்சிமாரும் விpளையாட்டுக்களை ஆரம்பித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் இன்று அது அவருக்கே எதிராக அமைந்துள்ளது.

அவர் நினைத்தார் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் நான்தான் வேட்பாளராக களமிரங்கப் போகிறேன் என்று அதனால் எனக்கு எதிராக பல லட்சம் ரூபா செலவு செய்து எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு அனைத்து விடயங்களையும் செய்திருந்தார் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது அவருக்கு பக்கத்தில் இருப்பவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று.

முஸ்லீம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற எவர் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ பக்கம் இருக்கின்றார்கள் அப்படி எவரும் இருப்பார்களானால் அவர்கள் துரொகிகளாகத்தான் இருக்க வேண்டும் அப்படிப்பட்டவர்கள் 'முனாபிக்' அல் குர்ஆனில் முனாபிக் பற்றி என்ன கூறக்கட்டுள்ளது என்று எங்களது எதிரனியினருக்குத் தெரியாது குர்ஆனைப் படித்தால்தான் முனாபிக் என்றால் என்ன வென்று தெரியவரும் நான் ஒரு பௌத்தனாக இருந்தும் முனாபிக் என்றால் என்ன வென்று எனக்குத் தெரியும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் முஸ்லீம் அரசியல் வாதிகளுக்குத் தெரியாமல் இருப்பதுதான் எனக்கு கவலையாகவுள்ளது என்றும் கூறினார்.

Share it:

Post A Comment:

0 comments: