ஆளும்கட்சிக்கும் முரணாக முடிவெடுத்த போது தமது கட்சிக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாமல் தடுக்கவும், தமது முடிவு இனவாதிகளின் விஷமப் பிரச்சாரங்களுக்கு இடம் தந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தாம் ஜனாதிபதி தேர்தல் குறித்து முடிவெடுக்க காலதாமதமானதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
இலங்கையில், வரவிருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.
அது குறித்து பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், நாட்டில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே தமது கட்சி ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.



Post A Comment:
0 comments: