'முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம்' இனவாதிகளுக்கு சாதகமாகியது..!

Share it:
ad
(J.M.Hafeez)

இலங்கையில் வீசுகின்ற அரசியல் காற்றில் பிரதான பாகம் வகித்த ஒரு விடயம்தான் ஸ்ரீ ல.மு.கா. எப்பக்கம் என்பது. இப்போது அக்கதை முற்றுப் பெற்று விட்டது. அனேகர் மட்டில்லா மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இன்னொரு சாரார் மன எரிச்சல் காரணமாக 'வந்தா என்ன வராவிட்டால் என்ன' என்ற ஒரு அசட்டுக் கதையைக் கூறுகின்றனர். 

இவை இரண்டும் எல்லோருக்கும் நன்கு விளங்கும் ஆனால் மூன்றாம் தரப்பு ஒன்று சமூகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கவலை அடைந்துள்ளது. இது என்னடா புதுக் கதை என்று நீங்கள் கேட்கலாம். ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் அதனை எத்தி வைப்பது எனது கடமை. இதனை சிலர் போற்லாம். தூற்றலாம். அதுபற்றிக் கவலை இல்லை. 

ஏற்கனவே இது தொடர்பாக எம்மால் எடுத்துக்காட்டப்பட்ட விடயங்களுக்கு பலர் சாதக பாதக கருத்துக்களை 'கொமண்ட்ஸ்' ஆக எழுதி இருந்தீர்கள். உங்கள் பார்வை அதன் மீது பட்டமைக்கு எமது நன்றிகள். நூற்றுக் கணக்கான விமர்சனங்கள் இருந்தன. சுட்டிக்காட்டியவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

'பல்லில்லாத வாய்க்கு அவல் கிடைத்தமாதரி' இனவாதிகளுக்கு இக்கதை இப்போது நன்றாக சுவைக்கிறது. பலவருடங்களுக்கு முன்  பிரபாகரனுடன் எடுத்த புகைப்படத்தை ஒரு பேரின இணையம் இச்செய்திக்கு முகப்புப்படமாகப் போட்டுள்ளது.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் தற்போதைய அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த ஊடக மகாநாட்டில் இதனை தமக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

அதாவது நாம் ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொண்டவர்கள். மகிந்த சிந்தனைக்கு அப்பால் செல்ல முடியாது. மகிந்த சிந்தனையில் ஒற்றை ஆட்சி பற்றியே குறிப்பிட்டுள்ளோம். விடுதலைப்புலிகள் கேட்டதும், தமிழர் கூட்டணி கேட்பதும், புலம் பெயர்ந்த தமிழர்கள் கேட்பதும் தனி நிர்வாக மாவட்டமாகும். அதனையே றவூப் ஹகீம் உம் கேட்கிறார். அதனை எம்மால் கொடுக்முடியாது. ஆனால் எதிரணியின் பொது வேட்பாளர் அதனை ஏற்றுக் கொண்டுள்ள காரணத்ததால் அவர்கள் ஆதரவு அப்பக்கம் திரும்பி விட்டது என்பதே அந்த ஊடக அறிக்கையாகும். இதை வைத்து பொது வேட்பாளருக்கு பிரிவினை வாத முத்திரை குத்தப்பட்டு விட்டது. இங்கே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சுப் போடப்பட்டது வேறு விடயம். இச்செய்தி வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு எது வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் வடகிழக்கிற்கு வெளியே வசிக்கும் நாம் ஒவ்வொரு கனப் பொழுதும் இதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும்.

இக்தையைக் கூறியதும் ஒருவர் கூறினார் அப்படியெல்லாம் பயந்து வாழ முடியாது. அவன்கள் 'கெடக்கிரான்கள்'; என்றார். 'அவன்கள் கெடப்பது' அல்ல கதை. தினசரி நாம் சந்திக்கும் நூற்றுக் கணக்கான சிங்கள மக்களுக்கு பதில் கூறியாக வேண்டும். அதன் வலி கொழும்பு கண்டி போன்ற பிரதேசங்களில் வாழ்வோருக்கு நன்கு புரியும். எந்த இடத்தில் எதை எடுத்தாலும் 'தனி நாடு' என்ற கோசத்தை முன்னிலைப் படுத்து வார்கள். இதற்கு நாம் தினமும் சிறுகச் சிறுக விலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சிங்கள சகோதரர்களுடன் வேலை செய்யும் சகலருக்கும் இது ஒரு தலையிடியாகும். சிங்களவர்கள் சம்பந்தப்படாத எந்த ஒரு பணியும் வடகிழக்கிற்கு வெளியே மிக அருமை. நல்ல வேளை வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்தப்பிரச்சினை இல்லை.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக ஒரு நண்பர் சொன்ன கதை இதுதான். அவர்கள் அரசுடன் பங்காளியாக இருக்கும் போது நாம் யாரை ஆதரிப்பது என்று 20 முறை கூடிப் பேசத் தேவையில்லை. மௌனமாக இருந்தாலே போதும். நடப்பது நடக்கட்டும் என்றும் மௌனவிரதம இருந்திருக்கவும் முடியும் என்றார்.

இன்னொறு நண்பர் கூறினார் அப்படியாயின் இன்னும் சில மாதங்களில் வரும் பாராளு மன்றப் பொதுத் தேர்தலில் போது அவர்களால் பொது மக்களாகிய எம்மை எதிர் கொள்ள முடியாது போய்விடுமே. ஆதனால்தான் அவர்கள் கட்சி மாறினார்கள். தலைவர் கண்டியில் போட்டி இடுவதாயின் ஐ,தே.க. யில்தான் வெற்றி பெறமுடியும். கிழக்கில் அவர் செல்வாக்கை கூட்டவேண்டுமானால் கட்சி மாறித்தான் ஆக வேண்டும். மௌனமாக இருந்து தற்போதைய ஆட்சியாளர்களுடன் போட்யிட்டால் பொது மக்கள் கட்டுப்பணம் இல்லாமலே தள்ளுபடி செய்து விடுவார்கடிளே என்றார். இதுதான் 20 முறை கூடிப்பேசிய இரகசியம். தலைவர் ஒன்றும் தெரியாத முட்டால் அல்ல. அதனையே அவர்கள் கட்சிதமாகச் செய்துள்ளனர் என்றார்.

இனவாதிகளுக்கு தீணி போடும் ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது என்றார்.
கட்சிதாவிய விடயம் தொடாபாக ஒரு சிங்களவரது கருத்து இதோ,

මම සහ මගේ පවුලේ අය මේ සැරේ ඡන්දේ නොදී ඉන්න හිටියේ අපි නිසා.නමුත් අද අපි තීරණය කලා මහින්ද මහත්තයට ඡන්දය ලබා දෙන්න.සිංහල මිනිසුනේ දැන්වත් හිතන්න රට නැවත කොහෙටද අරන් යන්න හදන්නේ කියලා.ගිය පාරත් හකීම් නඩය සරත්ට දුන්නේ.ඒත් පරාදයි ලක්ෂ 18කින්.

அதாவது நானும் எனது குடும்பமும் இம்முறை வாக்களிக்காமல் இருக்க யோசித்தோம். இன்று முடிவு செய்தோம் மகிந்த மாஹத்தியாவுக்கு வாக்களிப்பதற்கு. சிங்கள மக்களே நாடு எங்கு போகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். ....

இப்படி இன்னும் பல கருத்துக்கள் சிங்கள இணையங்களில் உண்டு. ஒரு சிலதை மட்டும் தருகிறோம். விளங்கிக் கொள்வதற்காக.

1. සිංහලුනේ තොපිට රටක් ඕනෙ නම් වහා පරක්කු නොවී රජය දිනවව්.රටට ආගමට ජාතියට ආදරේ ඇති අපේ ජනාධිපති මහින්ද මැතිදුන්ට රට බාර දෙමු.එහෙම එපා නම් පාට බල බල හිටපියව්.අපි ආණ්ඩුව දිනවමු.විල්පත්තුව ඉම් වහාම රජයට බාර දීම සදහ හකිම් වහා කිරියා කරව.

2.රජාට දැන්වත් තේරෙයිද වට කරගෙන හිටිය තම්බි රැලගෙ හැටි. හකීම් ල බදුර්දීන් ල වට කරගෙන පල්ලි වල ලැග ලැග සිංහලයන්ට කෙලව කෙලව හිටිය. උන්ට විල්පත්තු වගේ වනාන්තර පිටින් කොල්ල කන්න දුන්න. අන්තිමට ඡන්දෙ ලං වෙද්දි ඔක්කොම අනිත් පැත්තෙ. රජාට ඉතුරු වෙන්නෙ සිංහල ඡන්ද ටික විතරයි. රජාට දැන්වත් තේරෙයිද මිනිහ රජ වෙලා ඉන්නෙ සිංහලයො නිසා කියල. ආයෙ දෙකක් නෑ මේ පාරත් රජා දිනුවොත් මේ රැලම රජාගෙ පැත්තට යයි. රජා මල් මාලා දාල පිළිගනියි.

3.සිංහළයිනි නැවත දෙමළ ත්රස්තවාදීන්ගෙන් අවූරුදු 30ක් කාපු කෑම මුස්ලිම් අන්තවාදින් ගෙන් කනවාද? තීරණය ඔබේ අතේ.මුන් දෙගොල්ලම පිටපොට ගහන්නෙ වෙනවෙනම රටෙන් කෑලි දෙකක් සිරිසේන ඇතුලු කල්ලිය ලවා කඩව ගන්න.මේ රට ඉරාකයක්ලිබියාවක් වනවාට ඔබ කැමතිද?ඒ වෙනස දකින්නනට කැමති නම් සිරිසේනට ඡන්දය දෙන්න.
4.අනේ මේ කාලකන්නියා ආණ්ඩුවෙන් ගියා කියන පුවත ලැබෙන්නේ කවදද කියලා බලාගෙන හිටියේ.
හැබැයි ආයෙත් නම් මූව ගාව ගත්තොත් එදාට ජනාදිපති තුමාට එරෙහිව පාරට බහින්නේ අපියි

Share it:

Post A Comment:

0 comments: