கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் - பொதுபல சேனா எச்சரிக்கை

Share it:
ad
கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத அமைப்புக்கள் இயங்கி வருவதாகவும், இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது.

கிழக்கு தீவிரவாத இயக்கங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரின் எச்சரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற துயரமான சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கிழக்கில் தீவிரவாத அமைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வருவதாக சர்வதேச அமைப்புக்கள் கூட எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு கிழக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் குறிப்பாக ஜிஹாதிய இயக்கங்கள் இயங்கி வருவதாக முன்னர் பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share it:

Post A Comment:

0 comments: