''நான் ஜனாதிபதியானால்'' மைத்திரிபால

Share it:
ad
அபிவிருத்தி என்னும் போர்வையில் நாட்டு மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான் ஜனாதிபதியானால் இன்றுள்ளதைப் போன்று மூன்று மடங்கு அபிவிருத்தியினை ஏற்படுத்துவேன். மேலும் தோட்டப்புற இளைஞர்களின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கொத்மலையில் இடம்பெற்ற எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.தே. க.வின் அமைப்பாளர் அசோக ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜயசூரிய நவீன் திசாநாயக்க, வீ. இராதாகிருஷ்ணன், பி.இராஜதுரை, ஆர். யோகராஜன் உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டனர். 

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் போன்ற  பல்வேறு தரப்பினர்களும் இன்று பொருளாதாரம் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இவர்களின் நலன்கள் பேணப்படுவது அவசியமாகும். 

இளைஞர் யுவதிகளின்  வேலையில்லாப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. தோட்டப்புற இளைஞர் யுவதிகளும் இதில் உள்ளடங்குகின்றார்கள். நான் ஜனாதிபதியானால் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பேன். தொழில் நுட்ப அறிவினை மேம்படுத்துவதோடு இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 

பட்டினி ஒரு மோசமான அவலமாக உள்ளது. நாட்டு மக்களின் பட்டினியை உணர்ந்து கொள்ளாத அரசாங்கம் எமக்குத் தேவையில்லை. உல்லாச பயணத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு  வருகின்றது. இதில் எவ்விதமான நியாயமும் இல்லை. நான் ஜனாதிபதியானால் காணி விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை அமைத்து நியாயம் பெற்றுக் கொடுப்பேன்.  
Share it:

Post A Comment:

0 comments: