மஹிந்தவை வெற்றிபெறச் செய்ய, எந்த நிபந்தனையுமின்றி பூரண ஆதரவு அளிக்கப்படும் - ஞானசார

Share it:
ad
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்யவென எந்தவொரு நிபந்தனையும் இன்றி பூரண ஆதரவு அளிக்கப்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

27,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து மீட்ட நாட்டை சீர்குலையச் செய்ய நூல்பாவை தலைவர் ஒருவருக்கு இடமளிக்கப்பட மாட்டாதென கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். 

பொது வேட்பாளரின் கொள்கை ´கூட்டாக்கம்´ என்றும் அதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். 

´ஒன்றாக உண்டு குடித்து இருந்துவிட்டு பங்கு குறைந்ததால் இப்போது அவதூறு பேசுகிறார்´ என்று தேரர் தனது மொழியில் கூறினார். 

´ராஜபக்ஷகள் இறுதியில் விகாரை அமைத்து வணங்கப்பட வேண்டியவர்கள். ஊழல் மோசடி இருந்தால் முன்னரே சரிசெய்து கொள்ள இடமிருந்தது´ என தேரர் தெரிவித்துள்ளார். 

ரத்தன தேரர் பௌத்தர்களின் பிரச்சினை குறித்து பேசினால் நன்று எனவும் அப்படி செய்திருந்தால் இந்தளவிற்கு தீவிரமாகியிருக்கத் தேவையில்லை என ஞானசார தேரர் சுட்டிக்காட்டினார்.
Share it:

Post A Comment:

0 comments: