முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் ஏமாற்றிய அரச தரப்பு..!

Share it:
ad
முஸ்லிம்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்தவாரம் நடைபெற்றிருந்தது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தொடர் பேச்சுகக்ளில் ஈடுபடுவார்கள் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தியிருந்ததுடன் (டிசம்பர் 3 அல்லது 4) ஆம் திகதிகளில் அரசாங்க அமைச்சர்கள் தம்முடன் பேச்சுக்களில் ஈடுபடலாமெனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருந்தபோதும் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் இந்த செய்தி எழுதப்படும் (ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி அதிகாலை வேளை) வரையிலான காலப்பகுதி வரை அரச தரப்பிடமிருந்து, முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தவிதமான அழைப்பும் கிடைக்கவில்லை என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

இதனால் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களிடையே அதிருப்தி நிலை மேலாங்கியிருப்பதுடன், தம்மை அரசாங்கம் மீண்டும் ஏமாற்றியிருப்பது போன்ற உணர்வு மேலாங்கியிருப்தாகவும் அறியவருகிறது.
Share it:

Post A Comment:

0 comments: