கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிவைப்பு (படங்கள்)

Share it:
ad
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உங்களுக்கு வளமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு வேலைத் திட்டத்தின் கீழ் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில்  வரி இல்லாமல் 50000 ரூபாய் பெறுமதிக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கடந்த வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணாமலை,கந்தளாய் ஆகிய 4 பொலிஸ் பிராந்தியங்களிலுமுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 149 ஆண்,பெண் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு 14-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய முன்றலில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. உபுல் ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு–அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன கலந்து கொண்டார்.

இதன் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கஉள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளினால் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஆண்,பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 149 பேருக்கு மோட்டார் சைக்கிள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இன்று வழங்கி வைக்கப்பட்ட 149 மோட்டார் சைக்கிளில் 100 மோட்டார் சைக்கிள் ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்,49 மோட்டார் சைக்கிள் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share it:

Post A Comment:

0 comments: