கிழக்கு மாகாண, முஸ்லிம் பிரதேசங்களில் அப்படைவாதிகள் - கதைவிடும் சிங்கள இணையம்

Share it:
ad
கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேசத்தில் ஆயுதங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என சிங்கள இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

குறித்த ஊடகத்தில் கிழக்கில் பற்றி எரியும் தீ எனும் தலைப்பில் மூன்றாவது வாரமாக வெளியிடப்பட்டுள்ள தொடர் கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் அடிப்படைவாதிகள் இன்று கிழக்கு மாகாணத்தில் கூட்டாக இணைந்து செயற்படுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் மூதூரில் உங்களுக்கு ஆயுதம் ஒன்றை இலகுவாக பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளலாம்.

ரி.56 ரக துப்பாக்கியொன்று 35 ஆயிரம் ரூபா, மி.மி.9 கைத்துப்பாக்கி 20 ஆயிரம் ரூபா, மி.மி.3.8 துப்பாக்கி 15 ஆயிரம் ரூபா, எல்.ரி.ரி.ஈ. பயன்படுத்திய மைக்ரோ துப்பாக்கி 10 ஆயிரம் ரூபா என்பன போன்ற விலைகளில் மூதூரில் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்று கிழக்கு மாகாண சிங்கள மக்கள் துக்ககரமான நிலைமையைச் சந்தித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்கையில் எமது அரசியல்வாதிகள் தற்போதுள்ள சிறந்த அரசியலை விட்டுவிட்டு நாட்டுக்கு எதிரான சர்வதேச சூத்திரதாரிகளினால் முஸ்லிம் நாடுகளின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்குத் துணைபோகின்றனர். இதனை வெளிப்படுத்துவது இந்த தொடர் கட்டுரையின் நோக்கமாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெல உறுமய ரத்ன தேரர் மாவில்ஆறு வாவியை திறக்க எடுத்த முயற்சியையும் மறந்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டும் செல்லத் தீர்மானம் எடுத்துள்ளார்.

ஹெல உறுமய கட்சி செல்லும் பாதை எது என்பதை தீர்மானித்துக் கொள்ள முடியாதுள்ளது.

ஆரம்பத்தில் எங்கு போகின்றீர்கள் என்று கேட்டால் பையில் தேங்காய் என்று பாதை மாறிச் செல்பவர்களுக்கு எமது முன்னோர்கள் உதாரணம் கூறுவார்கள்.

ஆனால், இப்போது எங்கு போகிறீர்கள் என்று கேட்டால், பையில் டொலர் என்று தான் அதனை மாற்றிக் கூற வேண்டியுள்ளது எனவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share it:

Post A Comment:

0 comments: