பின் லேடனைச் சுட்டதாகக் கூறியவர் மீது விசாரணை

Share it:
ad
அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை தலையில் சுட்டதாகக் கூறிய அமெரிக்க முன்னாள் அதிரடிப்படை வீரர் ராபர்ட் ஓ' நீல் மீது விசாரணை நடைபெற்று வருதாக அந்த நாட்டு கடல்படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த பின் லேடனை, அமெரிக்க கடல்படை சிறப்பு அதிரடிப்படையினர் (சீல்) கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர்.

மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை குறித்த தகவல்களை அமெரிக்க அரசு பரம ரகசியமாகப் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Share it:

Post A Comment:

0 comments: