மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க விரும்பவில்லை - JVP

Share it:
ad
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இதற்கு முன்னர் பதவிக்கு வந்தவர்கள் நாடாளுமன்றத்தை பலம் குன்ற செய்தனர் ஆனால், மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கந்தலான நோஞ்சானாக மாற்றி விட்டதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே ஜே.வி.பி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை.

ஒன்று மகிந்த ராஜபக்ஷ நடத்த தீர்மானித்துள்ள இந்த தேர்தல் சட்டவிரோதமானது. இரண்டாவது மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க விரும்பவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை எனவும் லால்காந்த கூறியுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: