மௌலவி ஆசிரியர் நியமனம் - ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பது பற்றி ஆலோசனை

Share it:
ad
2010ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்கக்கோருவது பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைப்பது பற்றிய ஆலோசனை கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உலமா கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக இது பற்றிய கருத்தரங்கை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

1992 முதல் வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்காக உலமா கட்சி பாரிய அளவில் போராடியதன் பயனாக கடந்த 2010ம் அண்டு 151 பேருக்கு இந்நியமனம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது. அதன் பின் உலமாக்களின் அசமந்தம் காரணமாக இந்நியமனம் தொடர்டந்து இடம் பெறவில்லை. இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உலமாக்களும் முன்வரவில்லை. இந்த நிலையில் இதனை இப்படியே விட்டு விடுவது எதிர் காலத்தில் இஸ்லாத்தை கற்பிக்க பாடசாலைகளில் மௌலவி ஆசிரியர்கள் முற்றாக இல்லாது போய் விடும் என்பதை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சந்தர்ப்பத்திலவாது உலமாக்கள் உலமா கட்சியுடன் இணைந்து செய்றபடுவதன் மூலம் இந்நியமனத்தை வென்றெடுக்க முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.  

அந்த வகையில் இதற்கான முன்னெடுப்பை எடுப்பது பற்றி அனைத்து மௌலவிமார்களினதும் ஆலோசனைகளை பெறும் முயற்சியாகவே இத்தகைய கருத்தரங்கை உலமா கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் உலமாக்கள்; மற்றும் புத்திஜீவிகள் தமது பெயர் முகவரியை  உலமா கட்சியின் தலைமைக்கு தெரியப்படுத்தும்படி கேட்கப்படுகின்றனர். அவற்றை 0777570639 எனும் இலக்கத்துக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: